சுற்றுலாப்பயணிகள் குறித்து சுவிஸ் அரசியல்வாதி தெரிவித்த கருத்தால் சர்ச்சை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பிரபல சுற்றுலாஸ்தலம் ஒன்றிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குறித்து முக்கிய அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ள கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

SVP கட்சியின் தலைவரான Thomas Aeschi, சமீபத்தில் Engelberg-Titlis மலைப்பகுதிக்கு பனிச்சறுக்குக்காக சென்றிருந்தார்.

அப்போது ட்வீட் ஒன்றில் அவர் ஷெங்கனும் டப்லினும் நமக்கு ஏற்படுத்தும் வருவாயைவிட செலவுதான் அதிகம், நமது புலம்பெயர்தலை மீண்டும் கட்டுப்படுத்த வேண்டியதுதான் என்று பதிவிட்டிருந்தார்.

சுவிட்சர்லாந்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் நிலவும் அமைதியற்ற உறவை குறிப்பதற்காக அவர் அவ்வாறு தெரிவித்திருந்தார்.

Aeschiயின் SVP கட்சி எப்போதுமே புலம்பெயர்தல் தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகள் குறித்து பிரச்சாரம் செய்து வந்ததும், தடையற்ற போக்குவரத்துக்கு முடிவு கட்ட அழைப்பு விடுத்த ஒரு வாக்கெடுப்பை ஆதரித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் சுவிட்சர்லாந்தின் பனிச்சறுக்கு தொழில் சமீப காலமாக தள்ளாடி வரும் நிலையில், Engelberg-Titlisஇல் காணப்பட்ட மக்கள் நெரிசல் குறித்து அவர் தெரிவித்த கருத்திற்கு கடும் எதிர்ப்பு தோன்றியுள்ளது.

Titlis-Bergbahnen கேபிள் கார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் உட்பட பலரும் Aeschiயை கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.

Aeschiயின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள ட்விட்டர் பயனர் ஒருவர், நீங்கள் உங்கள் கட்சியை வர்த்தக கட்சி என்கிறீர்கள்! தயவு செய்து வீட்டுக்குள்ளேயே இருங்கள், அதுதான் எல்லோருக்கும் நல்லது என்று பதிவிட்டுள்ளார்.

இன்னொருவர் Titlisஇல் எத்தனை புகலிடக் கோரிக்கையளர்கள் இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

தேர்தல் வரும் நேரத்தில் மக்களின் கவனம் ஈர்ப்பதற்காகத்தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்கிறார் இன்னொருவர். சுவிட்சர்லாந்தில் அக்டோபரில் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்