ஒரு நல்ல தந்தை என்றே கருதினேன்... 8 வயது சிறுமி மரணமடைந்த விவகாரத்தில் தந்தையின் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் 8 வயது சிறுமி மரணமடைந்த விவகாரத்தில் பெற்றோரிடம் விளக்கம் கேட்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

பெர்ன் மாகாணத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய விவகாரம், இந்த 8 வயது சிறுமியின் மரணம்.

சிறுமியை அதன் பெற்றோர் அடித்து துன்புறுத்தி மரணத்திற்கு தள்ளியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து 3 மாத காலம், தொடர்புடைய சிறுமியை அதன் தந்தை கடுமையாக தாக்கி சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமி போதுமான அளவு சாப்பிடுவதில்லை என்பதே பெற்றோர் முன்வைக்கும் குற்றச்சாட்டு. ஆனால் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட சிறுமி தொற்று நோய் காரணமாகவே, சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

உணவருந்த கட்டாயப்படுத்துவதுடன் அந்த தந்தை கடுமையான உடற்பயிற்சிகளுக்கும் சிறுமியை உட்படுத்தியுள்ளார்.

இது குறித்த சிறுமியை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இதனையடுத்து பிப்ரவரி 15 ஆம் திகதி சிறுமி மரணமடைந்துள்ளார்.

ஆனால் முதற்கட்ட விசாரணையில் சிறுமியின் பெற்றோர் மீது எவ்வித கொலை வழக்கும் பதிவு செய்யவில்லை.

புதனன்று நீதிமன்றத்தில் விளக்கமளித்த சிறுமியின் தந்தை, தாம் ஒரு நல்ல தந்தை என இதுநாள் வரை கருதியிருந்ததாகவும்,

ஆனால் தற்போது அது இல்லை என உணர்வதாகவும், கண்ணீருடன் பதிவு செய்துள்ளார்.

விசாரணையின் முடிவில் அவருக்கு 48 மாத சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்