Brexit: ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் பயிலும் சுவிஸ் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பிரெக்சிட் குறித்து பெரிய அளவில் அலட்டிக்கொள்ளாத ஆக்ஸ்போர்டில் பயிலும் சுவிஸ் மாணவர்களுக்கு பிரெக்சிட் பெரிய பிரச்சினை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

பிரெக்சிட்டால் சுவிஸ் மாணவர்களின் கல்விக்கட்டணம் இருமடங்காக உயர இருக்கிறது.

சுவிஸ் குடிமக்களாகிய மாணவர்கள், தங்கள் படிப்பு தொடங்குவதற்கு மூன்றாண்டுகள் முன்பிலிருந்து பிரித்தானியா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் வசித்திருக்க வேண்டும் அல்லது அவர்களது நெருங்கிய உறவினர் யாராவது பிரித்தானியா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் மூன்றாண்டுகள் வசித்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு Home fee status என்னும் அந்தஸ்து கிடைக்கும்.

இல்லையென்றால் அவர்கள் வெளிநாட்டு கட்டணம் செலுத்துவோராகத்தான் கருதப்படுவார்கள்.

இதனால் என்ன பிரச்சினை என்றால், முன்பு பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய பொருளாதார பகுதிகள் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் குடிமக்கள் ஆண்டொன்றிற்கு 9,250 பவுண்டுகள் கல்விக்கட்டணம் செலுத்தினார்கள்.

இனி அவர்கள் ஆண்டொன்றிற்கு 24,740 பவுண்டுகள் முதல் 34,678 பவுண்டுகள் வரை பட்டப்படிப்பிற்காக கல்விக்கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே, பல சுவிஸ் மாணவர்கள், பண உதவி செய்பவர்கள் இல்லாவிட்டால் தங்களால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கே வந்திருக்க முடியாது என்கின்றனர்.

இதனால் ஸ்காலர்ஷிப் இருந்தால் மட்டுமே ஆக்ஸ்போர்டில் கல்வி கற்க முடியும் என்ற நிலைமைக்கு சுவிஸ் மாணவர்கள் ஆளாகிவிடுவார்கள் என்றே தோன்றுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers