இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த சுவிஸ் நாட்டவர்கள்: ஜனாதிபதி இரங்கல்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த சுவிஸ் நாட்டவர்களுக்கு சுவிஸ் ஜனாதிபதி தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த இருவர், அவர்களில் ஒருவர் சுவிஸ் - இலங்கை இரட்டைக் குடியுரிமை கொண்டவர், இலங்கை தலைநகர் கொழும்புவில் ஞாயிறன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்துள்ளதை சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இவர்களைத் தவிர்த்து மூன்றாவது நபர் ஒருவர், இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர், ஆனால் அவர் சுவிஸ் நாட்டவர் அல்ல, அவரும் உயிரிழந்துள்ளார்.

சுவிஸ் ஜனாதிபதி Ueli Maurer, சுவிஸ் ஃபெடரல் கவுன்சிலின் செய்தி தொடர்பாளரின் ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், சுவிஸ் அரசு சார்பாக மத கொண்டாட்டங்களின்போது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்