குளிர் சாதன பெட்டிக்குள் 21 பூனைகளை மறைத்து வைத்திருந்த நபர்: அதிகாரிகள் எடுத்த முடிவு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்ட பொலிசார் அங்கு குளிர் சாதன பெட்டி ஒன்றிற்குள் 21 பூனைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.

அந்த வீட்டில் வளரும் பயங்கரமான நாய்களால் எப்போதும் தொல்லை ஏற்படுவதாகக் கூறி அக்கம் பக்கத்தார் அளித்த புகாரின்பேரில் அந்த வீட்டை பொலிசார் சோதனையிட்டனர்.

மோசமான நிலையிலிருந்த 2 நாய்கள், 4 முயல்கள், ஏழு கோழிகள் மற்றும் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் ஒருவகை எலிகள் 4 ஆகியவற்றையும் அவர்கள் கைப்பற்றினர்.

மேலும் பிரீஸர் ஒன்றை சோதனையிட்டபோது அதற்குள் 21 இறந்த பூனைகள் இருப்பதையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.

ஏற்கனவே விலங்குகள் நல அதிகாரிகளுடன் பிரச்சினைகள் ஏற்பட்டதையடுத்து அந்த நபருக்கு விலங்குகளை இனப்பெருக்கம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது வாழ்நாள் முழுமைக்கும் விலங்குகளை வைத்துக் கொள்வதற்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்