Brexit தொடர்பில் சுவிஸ் மற்றும் பிரித்தானிய குடிமக்கள் மனதில் எழும் சில கேள்விகளுக்கான பதில்கள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பிரெக்சிட்டுக்காக குறிக்கப்பட்ட நாள் நெருங்கிவிட்ட நிலையிலும் இன்னும் உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப்பட்டதுபோல் தெரியவில்லை.

சுவிட்சர்லாந்தும் பிரித்தானியாவும், பிரெக்சிட் எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, பிரெக்சிட்டுக்குப் பின்னான தங்கள் குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் ’சுவிஸ் பிரித்தானிய குடிமக்களின் உரிமைகள் ஒப்பந்தம்’ என்னும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளன.

இந்நிலையில் சுவிஸ் மற்றும் பிரித்தானிய குடிமக்கள் மனதில் எழும் சில கேள்விகளுக்கான பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஒப்பந்தங்களுடனான பிரெக்சிட் அல்லது ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட் எது நிகழ்ந்தாலும், மொத்தத்தில் பிரெக்சிட் நிகழும் பட்சத்தில் என்ன நடக்கும் என எதிர்பார்க்கலாம்?

இரண்டில் எந்த பிரெக்சிட் நிறைவேறினாலும், ’சுவிஸ் பிரித்தானிய குடிமக்களின் உரிமைகள் ஒப்பந்தம்’ பிரித்தானியாவில் வசிக்கும் சுவிஸ் குடிமக்களின் உரிமைகளையும், சுவிட்சர்லாந்தில் வசிக்கும் பிரித்தானிய குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும்.

பிரெக்சிட்டுக்குப்பின் சுவிட்சர்லாந்துக்கு வர விரும்பும் பிரித்தானிய குடிமக்களைப் பொருத்தவரையில் ஏதேனும் மாற்றம் உண்டா?

ஒரு தற்காலிக நடவடிக்கையாக, 30 மார்ச் 2019 முதல் 31 டிசம்பர் 2019 வரை, 3,500 பிரித்தானிய குடிமக்கள் சுவிட்சர்லாந்தில் பணிபுரிய அனுமதிக்கும் ஒரு பிரத்யேக quotaவை அறிமுகம் செய்ய சுவிஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

பிரித்தானியாவில் வசிக்கும் சுவிஸ் குடிமக்கள் என்ன செய்ய வேண்டும்?

டிசம்பர் 2020க்கு பின்னரும் பிரித்தானியாவில் வசிக்க விரும்பும் சுவிஸ் குடிமக்கள் (அவர்களுடைய குடும்பத்தாரும்) குடியமர்வு திட்டத்தின் கீழ், ‘settled status’ என்று அழைக்கப்படும் ஒரு புதிய வாழிட அந்தஸ்து கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers