உயிருடன் கொளுத்தி விடுவோம்... நாட்டுக்கு திரும்பிச் செல்: சுவிஸில் இனரீதியாக மிரட்டப்பட்ட இளம்பெண்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் லாசன்னே நகரில் ரயிலுக்கு காத்திருந்த இளம்பெண்ணை உயிருடன் கொளுத்திவிடுவதாக கூறி நபர் ஒருவர் மிரட்டிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

லாசன்னே ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளியன்று ரயிலுக்காக காத்திருந்துள்ளார் 14 வயதான Zoraida.

சம்பவத்தின்போது தமது ஹெட்ஃபோனில் பாட்டு கேட்டபடி இருந்ததால், முதியவர் ஒருவர் கடும் கோபத்துடன் பேசுவதை கவனிக்கவில்லை.

இந்த நிலையில் தமது ஹெட்ஃபோனை அப்புறப்படுத்தியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த நபர் மிகவும் அசிங்கமாக திட்டியது தம்மையே என்பதை Zoraida உணர்ந்துள்ளார்.

மேலும், தம்மை பரத்தை எனவும் அருவருப்பானவர் எனவும் அவர் வசைபாடியுள்ளார்.

தலையில் தாம் முக்காடு அணிந்திருந்ததால் இஸ்லாமியல் என தெரிந்துகொண்டு அவர் இனரீதியாக திட்டுவது தமக்கு புரிந்துகொள்ள முடிந்தது என கூறும் அவர்,

ரயில் பயணிகள் எவரேனும் தமது உதவிக்கு வரலாம் என நம்பிக்கை கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த களேபரத்தை எவரும் கண்டுகொள்ளவே இல்லை எனவும் வருத்தமுடன் பதிவு செய்துள்ளார்.

இதனிடையே குறித்த முதியவர் வசைபாடுவதை படம் பிடிக்கலாம் என மொபைலை எடுத்தவுடன் அவர் அமைதியாகியுள்ளார்.

அப்போது ரயில் வந்துள்ளது. அந்த நபரும் குறித்த இளம்பெண்ணுடன் ரயிலில் ஏறியுள்ளார்.

ரயிலில் வைத்தும் அந்த நபர் திட்டுவதை தொடர்ந்துள்ளார். ஒரு கட்டத்தில் திடீரென்று, உன்னை உயிருடன் கொளுத்திவிடுவோம், சொந்த நாட்டுக்கு சென்று விடு நாயே என மிரட்டியுள்ளார்.

ஆனால் அதுவரை பொறுமையாக இருந்த Zoraida, நான் பிறந்தது சுவிட்சர்லாந்தில், நான் சுவிஸ் குடிமகள் என பதிலளித்துள்ளார்.

இறங்கவேண்டிய பகுதி வந்ததும், Zoraida ரயில் இருந்து வெளியேறியுள்ளார்.

Zoraida-வை தொடர்ந்த அந்த நபர் அவரை ஒருகட்டத்தில் எட்டித் தள்ளிவிட்டு அங்கிருந்து மாயமாகியுள்ளார்.

இதனிடையே சக பயணி ஒருவரின் உதவியுடன் பொலிசாருக்கு தகவல் அளித்த Zoraida, தமக்கு பணமோ வேறெதுவும் தேவையில்லை,

ஆனால் இனரீதியாக தாம் துன்புறுத்தப்பட்டுள்ளேன் என்பதை மட்டும் தெரிவிக்க விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்