லாபம் அளித்த மக்களுக்கு சுவிஸ் ரயில்வே காட்டிய நன்றி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

2018ஆம் ஆண்டு சுவிஸ் ரயில்வேக்கு 568 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் லாபம் கிடைத்தது, இது 2017ஐ விட 42.5% அதிகம்.

ஆண்டு தோறும் சுவிஸ் ரயில்வேக்கு வரி செலுத்துவோரின் பங்களிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் சேகரித்து ரயில்வேக்கு அளித்த தொகை 3.5 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள், வருவாய் 2.7 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள்.

இந்த தொகை இல்லாவிட்டால் ரயில்வேக்கு 2018ஆம் ஆண்டில் 2.2 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் நஷ்டம் ஏற்பட்டிருக்கும்.

எனவே லாபத்தால் மகிழ்ச்சியுற்ற ரயில்வே நிர்வாகம், தங்களுக்கு லாபமளித்த பொது மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்தது.

தள்ளுபடி டிக்கெட்களை அளிப்பதன் மூலம் தனது லாபத்தில் ஒரு பங்கை மக்களுக்கு திருப்பிக் கொடுக்க ரயில்வே முடிவு செய்தது.

2018ஆம் ஆண்டு பயணிகளுக்கு தள்ளுபடியாக 80 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் மதிப்பிலான தொகையை ரயில்வே, டிக்கெட்கள் மீதான தள்ளுபடியாக கொடுத்தது.

2019இல் பயணிகளுக்கு டிக்கெட்கள் மீது 70% தள்ளுபடி அளிப்பதன் மூலம், 100 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் தள்ளுபடி அளிக்கவுள்ளது.

அத்துடன் பாதிவிலை பாஸ் வைத்திருப்பவர்களுக்கு அட்டை புதுப்பிக்கும்போது 15 சுவிஸ் ஃப்ராங்குகள் தள்ளுபடியும், 20 சுவிஸ் ஃப்ராங்குகள் அப்கிரேட்

வவுச்சரும், பாய்ண்ட் டூ பாய்ண்ட் பயண அட்டை வைத்திருப்பவர்களுக்கு 100 சுவிஸ் ஃப்ராங்குகள் வவுச்சரும் வழங்கப்பட உள்ளதோடு GA பயண அட்டை வைத்திருப்பவர்கள்

filing fees கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்