சுவிட்சர்லாந்தை உலுக்கிய சிறுவன் படுகொலை வழக்கு: வெளியான முக்கிய தகவல்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் பட்டப்பகலில் சிறுவனை கொலை செய்த வழக்கில் கைதான பெண்மணியை அடுத்த 3 மாத காலம் விசாரணைக்கு உட்படுத்த இருப்பதாக தகவல் பெளியாகியுள்ளது.

உளவியல் கோளாறு காரணமாகவே அந்த 75 வயது பெண்மணி சிறுவனை தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தாலும்,

குறித்த பெண்மணி தொடர்பில் தீவிர விசாரணை தேவை என அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மட்டுமின்றி அவருக்கு உளவியல் சிகிச்சையும் வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த திங்களன்று கொல்லப்பட்ட சிறுவனை தாக்கிய பின்னர், குறித்த பெண்மணி பலருக்கும் தொலைபேசியில் அழைத்து அந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த கொலையை அவர் புகழ் பெறுவதற்காக செய்தாரா என்ற கேள்வி பாஸல் நகர மக்களிடையே தற்போது எழுந்துள்ளது.

சிறுவனை கொடூரமாக தாக்கியபின்னர் அவர் ஏன் அனைவருக்கும் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டார் என்பது தொடர்பிலும் விசாரிக்க உள்ளனர்.

கைதாகியுள்ள பெண்மணி கடனில் மூழ்கியுள்ளார். மட்டுமின்றி 2007 ஆம் ஆண்டு காலகட்டத்தில் திவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்ற தகவலும் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்