சுவிட்சர்லாந்தில் மின் பற்றாக்குறை அபாயம்: எச்சரிக்கும் மின் உற்பத்தி நிறுவனம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

வரும் குளிர்காலத்தில் சுவிட்சர்லாந்தில் மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக மின் உற்பத்தி நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.

மின் உற்பத்தி நிறுவனமான Alpiqஇன் தலைவரான Jens Alder, சுவிட்சர்லாந்து புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதோடு, மின்சாரத்தை பகிர்ந்து கொள்வதற்காக பக்கத்து நாடுகளுடன் நீண்ட கால ஒப்பந்தங்களையும் மேற்கொண்டாலொழிய, வரும் குளிர்காலத்தின் மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து குளிர்காலத்தில் மின்சாரத்தை இறக்குமதி செய்யும் நாடு என்பதை சுட்டிக்காட்டும் Jens Alder, ஜேர்மனி தனது அணு நிலையங்களை மூடினால் நமக்கு போதுமான மின்சாரம் கிடைக்காது என்றார்.

எனவே புதிய மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவது மிகவும் அவசியம் என்கிறார் அவர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்