சுவிஸ் அகதிகள் முகாமில் கொலைவெறி தாக்குதல் நடத்திய வெளிநாட்டு பெண்மணி: நீதிமன்றம் அதிரடி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் புகலிடம் மறுக்கப்பட்ட பெண் ஒருவர் அகதிகள் முகாமில் நிர்வாகி ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

குறித்த 34 வயதான ஐவரி கோஸ்ட் நாட்டவரான பெண்மணியை சம்பவம் நடந்த அன்றே பொலிசார் கைது செய்தனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இக் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஐவரி கோஸ்ட் நாட்டவரான அந்த 34 வயது பெண்மணி சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி பலமுறை விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் அவரது விண்ணப்பம் ஒவ்வொருமுறையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறிப்பிட்ட அகதிகள் இல்லத்தில் இருந்து அவரை வேறு பகுதிக்கு மாற்ற நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர், வாய்ப்பு அமைந்தபோது சுவிஸ் நாட்டவரான நிர்வாகியை கொடூரமாக தாக்கியுள்ளார்.

பின்னர் மரணமடைந்ததாக கருதி அங்கிருந்து அவர் தப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட்ட பொலிசார், அன்றைய தினமே குறித்த பெண்மணியை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், குறித்த பெண்மணிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரிச் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்