இசைக்கும் பாலாடைக்கட்டிக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது என்கிறார்கள் இந்த சுவிஸ் ஆய்வாளர்கள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

இசைக்கும் சீஸுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார்கள் சுவிஸ் ஆய்வாளர்கள்.

உலக பாலாடைக்கட்டி (சீஸ்) தயாரிப்பு சாம்பியனான Antony Wyss தயாரித்த பாலாடைக்கட்டிகளை பல்வேறு இசைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள் சுவிஸ் ஆய்வாளர்கள்.

அதுவும் ஒன்றிரண்டு நாட்கள் அல்ல, எட்டு மாதங்களுக்கு... பாலாடைக்கட்டியும் ஒலியும் - ஒரு ஆய்வு என்ற பெயரில் ஆய்வொன்றை நடத்தினார்கள் அவர்கள்.

எட்டு மாதங்களுக்கு பிறகு அவற்றை சுவைத்துப் பார்த்ததில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சுவை கொடுத்தன.

ஆனால், அவை எல்லாவற்றிலும், ஹிப் ஹாப் இசைக்கு உட்படுத்தப்பட்ட பாலாடைக்கட்டி மிகவும் சுவையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பாக்டீரியங்கள் நல்ல வேலை செய்திருக்கின்றன என்று கூறும் ஆய்வாளர்களில் ஒருவரான Wampfler, ஹிப் ஹாப் இசக்கு உட்படுத்தப்பட்ட பாலாடைக்கட்டி, அருமையான பழச்சுவையையும் வாசனையையும் கொடுத்தது, அத்துடன் மற்ற பாலாடைக்கட்டிகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருந்தது என்கிறார்.

சோதனை முடிவுகளால் திக்கு முக்காடிப்போனோம் என்று கூறும் பேராசிரியர் Michael Harenberg, சுவிஸ் மக்கள்தான் இத்தகைய விடயங்களில் ஆரவம் காட்டுவார்கள் என்று நினைத்தோம், ஆனால் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள் கூட இந்த ஆய்வில் ஆர்வம் காட்டியது எங்களை ஆச்சரியத்தில் திழைக்கச் செய்துவிட்டது என்கிறார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...