சுவிட்சர்லாந்து விமானநிலையத்தில் கிடந்த மர்ம பொருள்! 3 மணி நேரம் நடந்த சோதனை

Report Print Santhan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கேட்பாரின்றி மர்ம பொருள் ஒன்று கிடந்ததால், சுமார் 3 மணி நேரம் விமான நிலையம மூடப்பட்டுள்ளது.

சுவிடசர்லாந்தின் Basel பகுதியில் இருக்கும் Basler Euro விமானநிலையத்தில் கடந்த சனிக்கிழமை லக்கேஜ் கொண்டுவரப்படும் டெர்மினல் பகுதியில் வெகுநேரமாக கேட்பாரற்று லக்கேஜ் ஒன்று இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அங்கிருந்த பயணிகள் உடனடியாக விமான அதிகாரிகளுக்கு தெரிவிக்க, விரைந்து வந்த அதிகாரிகள் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு அங்கிருந்த பயணிகள் அனைவரையும் வெளியேற்றி சுமார் 3 மணி நேரம் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதன் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதில் என்ன இருந்தது? என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. இந்த சோதனையின் காரணமாக 6 விமானங்கள் புறப்படுவதற்கு தாமதாக புறப்பட்டு சென்றுள்ளன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்