சுவிஸ் மருத்துவமனையில் நர்சை படுக்கைக்கு அழைத்த நோயாளி: வெளிவரும் திகில் சம்பவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் மருத்துவதுறையில் பணியாற்றும் பெரும்பாலான பெண் ஊழியர்கள் நோயாளிகளால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் நர்சுகளாக பணியாற்றும் பலரும் நோயாளிகளால் பாலியல் சீண்டல்களுக்கும் இழிவான பேச்சுக்களுக்கும் இரையாவது ஆண்டுதோறும் அதிகரிப்பதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

பெயர் வெளியிட விரும்பாத நர்ஸ் ஒருவர் தமது வாழ்க்கையில் எதிர்கொண்ட சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் நோயாளி ஒருவர், குறித்த நர்சை, அறையில் இடம் தாராளமாக உள்ளது, அருகில் படுக்கலாமே என அழைத்துள்ளார்.

ஆனால், இது தமது கணவரின் விருப்பத்திற்கு மாறானது என மறுத்துள்ளார். ஒருமுறை இன்னொரு நோயாளி தமது பின் புறத்தில் தட்டியதாக கூறும் அவர்,

இது குறித்து எதிர்ப்பு தெரிவித்தால், அவர்கள் மழுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒருவர் நர்ஸ் என்றால் அதன் உண்மையான பொருள் என்ன தெரியுமா எனக் கேட்டு, தமது நோக்கத்தை வெளிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம், சுவிட்சர்லாந்தில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளில் அரங்கேறி வருவதாகவும்,

ஜேர்மனியில் 3,000 நர்சுகளிடம் மேற்கொண்ட ஆய்வில் மூன்றில் இருபங்கு பேர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers