சுவிட்சர்லாந்தில் இளம்பெண்களைத் தேடிச் சென்று முகத்தில் கரிபூசும் இளைஞர்கள்: எதற்காக தெரியுமா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சாம்பல் புதனன்று கிழக்கு சுவிட்சர்லாந்தில் பின்பற்றப்படும் ஒரு பாரம்பரியத்தின்படி இளைஞர்கள் இளம்பெண்கள் முகத்தில் கரியைப் பூசுகிறார்கள்.

’Pschuure’ என்று அழைக்கப்படும் அந்த பண்டிகையின்போதுதான் இந்த மை பூசுதல் நடக்கிறது, ’Pschuure’ என்னும் வார்த்தையின் பொருளே கருப்பாக்குதல்தான்.

காலையில் குழந்தைகள் ஒரு கூடையை கழுத்தில் கட்டி கொண்டு வீடு வீடாக சென்று மிட்டாய்கள் கேட்கிறார்கள்..

காலையில் பிரகாசமாக தொடங்கும் பண்டிகை மாலையாகும்போது கருப்பாக மாறுகிறது. திருமணமாகாத இளைஞர்கள் பயங்கர முகமூடிகளை அணிந்து, மாறு வேடமிட்டு, கையில் ஒரு ரகசிய பார்முலா கொண்ட கருப்பு நிற மையுடன் திருமணமாகாத இளம்பெண்களைத் தேடிச் செல்கிறார்கள்.

அவர்கள் அணிந்திருக்கும் மணியின் ஓசை கேட்டு இளம்பெண்கள் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்.

ஆனால், சிக்கினால் அவ்வளவுதான், இளம்பெண்களை பிடித்து தரையில் தள்ளி, அவர்கள் முகத்தில் அந்த கருப்பு மையை பூசி விடுவார்கள் அந்த இளைஞர்கள்.

பின்னர் முட்டைகளை பிச்சை கேட்டபடியே, அந்த கருப்பு மை பூசப்பட்ட இளம்பெண்களைத் தேடிச் செல்லும் இளைஞர்கள், அவர்களை விருந்தொன்றிற்கு அழைக்கிறார்கள்.

நள்ளிரவுக்குமேல் ஆரம்பிக்கும் அந்த விருந்தை, மதுபான வகைகளுடன் அனைவரும் கொண்டாடுகிறார்கள்.

உணவிலும் மதுபான வகைகளிலும் முட்டை முக்கிய இடம்பிடிக்கிறது.

அவர்களது பாரம்பரியத்தின்படி, இந்த முட்டை உண்பது மற்றும் மதுபானம் அருந்துவது ஆகிய செயல்கள், திருமண வயதிலிருப்போர் மற்றும் விவசாய நிலத்தின் இனப்பெருக்கத் திறனை அதிகரிப்பதாக கிழக்கு சுவிட்சர்லாந்து மக்கள் நம்புகிறார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்