சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து முழுவதிலும் புகலிட கோரிக்கையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் நடைமுறைகள் குறித்த புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய விதிகளின்படி, புகலிடக் கோரிக்கைகள் மீதான முடிவுகள் விரைந்து எடுக்கப்பட உள்ளதோடு, புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.

இனி இந்த நடைமுறைகள் 140 நாட்களுக்குள் ஃபெடரல் புகலிட கோரிக்கை மையங்களில் நிறைவேற்றப்பட உள்ளன.

2015இல் இதே நடைமுறைகளுக்கு சராசரியாக 280 நாட்கள் ஆனது. இந்த மாற்றங்கள்,2016ஆம் ஆண்டு வாக்கெடுப்பு ஒன்றில் மூன்றில் இரண்டு பங்கு சுவிஸ் வாக்காளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

மார்ச் 1 முதல் புகலிடக்கோரிக்கைகள் ஃபெடரல் புகலிட கோரிக்கை மையங்களில் நிறைவேற்றப்பட உள்ளன.

இதற்காக, மக்கள் அணுக வேண்டிய இடங்கள், 80 சதவிகிதம் வரை தயாராகிவிட்டதாக நீதித்துறை தெரிவித்துள்ளது.

புதிய முறைமைகளின்படி, தகுதியான அகதிகள் எவ்வளவு விரைவாக ஏற்றுக் கொள்ளப்படுவார்களோ, அதேபோல் சுவிட்சர்லாந்தின் பாதுகாப்பு யாருக்கு தேவை இல்லையோ அவர்களும் மிக விரைவாக வெளியேற்றப்படுவார்கள் என நீதித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்