சுவிஸில் சொந்த மனைவியை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற வெளிநாட்டவர்: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பிரிந்து சென்ற மனைவியை மிரட்டி பாலியல் உறவுக்கு நிர்பந்தித்த கணவருக்கு சூரிச் நீதிமன்றம் தண்டனை அறிவித்துள்ளது.

சூரிஸ் நகரில் அமைந்துள்ள உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றுள்ளது.

42 வயதான ஆப்கானிஸ்தன் நாட்டவரே சுவிட்சர்லாந்தில் குடியிருக்கும் அவரது மனைவியிடம் அத்துமீறியவர்.

தமது கணவரிடம் இருந்து பிரிந்து குறித்த பெண்மணி சுவிட்சர்லாந்தில் குடியிருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரிந்து சென்ற தமது மனைவியை காண அந்த நபர் ஆப்கானில் இருந்து சுவிஸ் வந்துள்ளார்.

குடும்ப பிரச்னைகளை விவாதித்த நிலையில், அந்த நபர் தமது மனைவியை படுக்கை அறைக்கு அழைத்து நிர்பந்தித்துள்ளார்.

மட்டுமின்றி மனைவியின் கையை பிடித்து இழுத்துள்ளார். 10 நிமிட போராட்டத்திற்கு பின்னர் குறித்த பெண்மணி அந்த நபரிடம் இருந்து தப்பியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், தமது மனைவியின் முக்காடு இல்லாத புகைப்படங்களை பொதுமக்களிடம் காண்பித்து அவரை அவதூறாக பேசியுள்ளார்.

மேலும், தம்முடன் உறவுக்கு ஒப்புக்கொள்ள மறுத்தால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தகவல் அறிந்து விரைந்து வந்த மண்டல பொலிசார், அந்த நபரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குறித்த நபர் மீது வழக்குப் பதிந்து மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இதில் வலுக்கட்டாயமாக பலாத்காரத்திற்கு முயன்றதாக கூறி மாவட்ட நீதிமன்றம் அவர் மீது குற்றஞ்சாட்டியது.

மேலும் 2 ஆண்டு காலம் நிபந்தனையுடன் கூடிய சிறை தண்டனையும் விதித்துள்ளது.

தற்போது இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக, சூரிச் உச்ச நீதிமன்றம் நாள் ஒன்றுக்கு 10 பிராங்குகள் வீதம் 90 நாட்கள் அபராதம் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

மேலும், ரகசிய எண்ணுடன் கூடிய மொபைலில் இருந்து குறித்த பெண்ணின் முக்காடு இல்லாத புகைப்படம் எவ்வாறு அவர் கணவருக்கு கிடைத்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

மட்டுமின்றி பலாத்காரத்திற்கு முயன்றதாக கூறும் காலம் நிரூபணமாகவில்லை எனவும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்