சுவிஸில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட 156 மில்லியன் டொலர்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக மெக்ஸிக்கோ நாட்டின் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு அனுப்பப்பட்ட பணம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த பெருந்தொகைக்கு போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லை என தெரியவந்ததால் அதை தற்காலிகமாக முடக்கவும் மெக்ஸிக்கோ நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மெக்ஸிக்கோ நாட்டில் உள்ள ஹிடால்கோ பல்கலைக்கழகத்திற்கு சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் இருந்து சுமார் 156 மில்லியன் டொலர் அளவுக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது.

திடீரென்று ஹிடால்கோ பல்கலைக்கழகத்திற்கு பெருந்தொகை நிதியாக குவிந்ததால் சந்தேகமடைந்த மெக்ஸிக்கோ நிதி அமைச்சகம் குறித்த விவகாரத்தை விசாரணைக்கு உட்படுத்தியது.

இதில் சுவிஸ் வழியாக மொத்தம் 22 நாடுகளில் இருந்து அந்த தொகை ஹிடால்கோ பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது பணமோசடி கும்பலின் சதித்திட்டமாக இருக்கலாம் என சந்தேகமடைந்த மெக்ஸிக்கோ நிதி அமைச்சகம் தற்போது அந்த தொகையை முடக்கி வைத்துள்ளது.

இதனிடையே இந்த திடீர் பணவரவு தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பல்கலைக்கழக தலைவர் அடோல்போ போண்டிகோ லொயோலா, இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை அதிகாரிகள் எவரும் தொடர்புகொள்ளவில்லை எனவும்,

பலகலைக்கழகம் சார்பில் வெளிநாட்டில் தங்களுக்கு எந்த நிதியும் பாதுகாக்கப்படவில்லை எனவும்,

எந்த நாட்டில் இருந்தும் தங்களது பல்கலைக்கழகம் நிதி ஏதும் முறைகேடாக பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் நிதி அமைச்சகத்தின் விசாரணையின்படி ஸ்பெயின், பிரித்தானியா உள்ளிட்ட 22 நாடுகளில் இருந்து சுவிஸ் வழியாக அந்த 156 மில்லியன் டொலர் தொகை ஹிடால்கோ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்