தாயாரே சொந்த மகள்களின் பிறப்புறுப்பை சிதைத்த விவகாரம்: பெடரல் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் சொந்த மகள்களின் பிறப்புறுப்பை சிதைத்த சோமாலிய பெண்மணிக்கு பிராந்திய நீதிமன்றம் அளித்த தண்டனையை பெடரல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் Neuchâtel நீதிமன்றம் குறித்த சோமாலியா பெண்மணிக்கு 8 மாத சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி பெடரல் நீதிமன்றத்தை குறித்த பெண்மணி நாடியுள்ளார்.

சுவிஸில் குறித்த நிகழ்வு சட்டவிரோதம் என தமக்கு தெரியாது என வாதிட்ட பெண்மணியின் வாதத்தை ஏற்க மறுத்துள்ளது பெடரல் நீதிமன்றம்.

கடந்த 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சோமாலியா மற்றும் எத்தியோப்பியா நாடுகளில் வைத்து அப்போது ஆறரை மற்றும் 7 வயதான தமது இரு மகள்களுக்கும் பிறப்புறுப்பு சிதைத்தல் சிகிச்சையை மேற்கொண்டுள்ளார் குறித்த சோமாலிய தாயார்.

மட்டுமின்றி சம்பவம் நடைபெறும்போது குறித்த சோமாலிய தாயாருக்கு சுவிஸ் நாட்டில் எந்த தொடர்பும் இல்லை.

ஆனால் இந்த வழக்கு தொடுக்கப்படும்போது இவர் Neuchâtel பகுதியில் குடியிருந்துள்ளார்.

மேலும், இவரை பிரிந்து சென்றுள்ள இவரது கணவரே தமது மகள்களுக்கு இவ்வாறு நேர்ந்துள்ளது என புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட Neuchâtel நீதிமன்றம் குறித்த சோமாலிய தாயாருக்கு 8 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

படிப்பறிவில்லாத அந்த தாயார், தமது சமூக மக்கள் அளித்த கடும் நிர்பந்தத்திற்கு கட்டுப்பட்டு தமது மகள்களுக்கு பிறப்புறுப்பு சிதைத்தல் சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

பிறப்புறுப்பு சிதைத்தல் தொடர்பில் பெண் ஒருவருக்கு சுவிட்சர்லாந்தில் சிறை தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers