சுவிஸ் ராணுவத்தில் முதல் முறையாக போர் விமானம் ஓட்டும் பெண் இவர்தான்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் முதன்முறையாக பெண் ஒருவர் போர் விமான பைலட்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

லெப்டினண்ட் Fanny Chollet, F/A-18 ரக போர் விமானம் ஒன்றை ஓட்டுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக ராணுவம் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.

அந்த பயிற்சி முடிந்ததும், Chollet, சுவிஸ் ராணுவத்தில் போர் விமானம் ஓட்டும் முதல் பெண்ணாக ஆவார்.

Shotty என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படும் 26 வயதுள்ள Saint-Légierஐச் சேர்ந்த Chollet, தனது 17 வயது முதலே ஒரு போர் விமானியாக வேண்டும் என விரும்பியதாக ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012 இல் தனது பைலட் பயிற்சியை தொடங்கிய Chollet, விமானவியலில் ஒரு பட்டமும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers