இந்திய டீஸல் ரயில் எஞ்சின்களை மின்சார எஞ்சின்களாக மாற்றும் திட்டத்தில் உதவும் சுவிட்சர்லாந்து

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

இந்திய டீஸல் ரயில் எஞ்சின்களை மின்சார எஞ்சின்களாக மாற்றும் திட்டத்தில் உதவ சுவிட்சர்லாந்து நிறுவனம் ஒன்றிற்கு 42 மில்லியன் டொலர்களுக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

சூரிச்சை மையமாகக் கொண்ட ABB நிறுவனம், மின்சார எஞ்சின்களுக்கான கன்வர்ட்டர்களை இந்தியாவிலேயே தயாரித்து வழங்க உள்ளது.

இந்த கன்வர்ட்டர்கள் மின் கம்பியிலிருந்து வரும் மின்சாரத்தை, எஞ்சின் இயக்குவதற்கேற்ற மின்சாரமாக மாற்றும் திறன் கொண்டவை.

இந்த கன்வர்ட்டர்கள் தென்னிந்தியாவில் பெங்களூருக்கு அருகிலுள்ள நீலமங்களா என்னும் இடத்தில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளன.

அந்த கன்வர்ட்டர்களைப் பயன்படுத்தி வாரணாசியிலுள்ள இந்திய ரயில்வேயின் Diesel Locomotive Works தொழிற்சாலை மின்சார எஞ்சின்களை தயாரிக்கும்.

இந்தியாவின் ரயில் எஞ்சின்களை மின்சார எஞ்சின்களாக மாற்றுவதில் தங்கள் பங்களிப்பும் இருப்பதில் மகிழ்ச்சியடைவதாக ABBயின் முதன்மை செயல் அதிகாரியான Ulrich Spiesshofer தெரிவித்துள்ளார்.

2022 வாக்கில் இந்திய ரயில்வேயை முற்றிலும் மின்மயமாக்குவதற்கான திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்