நாடாளுமன்றத்திற்கு போட்டியிடும் ஆபாச நடிகை: அதுவும் எந்த கட்சிக்கு தெரியுமா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஆபாச படங்களை கடுமையாக எதிர்க்கும் கட்சியான சுவிஸ் தேசியவாத கட்சி சார்பில், ஆபாச நடிகை ஒருவர் நாடாளுமன்றத்திற்கு போட்டியிடும் தகவல் சுவிஸ் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாது.

கிளியோபட்ரா என்ற பெயரில் சுவிஸ் ஆபாச படங்களில் நடித்து வந்த ஆபாச நடிகையான ஜாஸ்மின் மேடர் என்பவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.

கிட்டத்தட்ட எல்லா வயது வந்த ஆண்களுமே ஆபாச படங்களை பார்க்கிறவர்கள்தான் என்று ஜாஸ்மின் கூறியுள்ள நிலையில், அவர் சார்ந்த கட்சியின் தலைவரும் ஜாஸ்மினின் கடந்த காலம் குறித்து எங்களுக்கு கவலையில்லை என்று கூறியுள்ளார்.

சுவிஸ் தேசியவாத கட்சி இதுவரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டிராத நிலையில், ஜாஸ்மின் வெற்றி பெறுவாரானால், நாடாளுமன்றத்திற்கு அந்த கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் உறுப்பினராக அவர் கருதப்படுவார்.

சுவிஸ் தேசியவாத கட்சி போதைப்பொருட்களுக்கும் ஆபாச படங்களுக்கும் எதிரானது என்ற கொள்கைகளை உடையதாகும்.

ஆபாச நடிகை ஒருவரை கட்சியில் சேர்த்துள்ளது குறித்து பேசியுள்ள கட்சியின் தலைவர்களில் ஒருவரான Raphael Rotzer, எங்களைப் பொருத்தவரையில், இஸ்லாமியவாதிகள், தீவிரவாதிகள், சர்வாதிகாரிகள், போர்க்குற்றவாளிகள், கொலைகாரர்கள் என யாராக இருந்தாலும் சரி, எங்கள் கட்சியில் சேரலாம், வெளியேறலாம், அவர்களது கடந்த காலம் குறித்து எங்களுக்கு கவலையில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers