சுவிட்சர்லாந்தில் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டல்: இரையாகும் இளம்பெண்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி இளம்பெண்களிடம் இருந்து சுமார் 360,000 பிராங்குகள் அளவுக்கு கொள்ளை நடந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் இணையம் வழியாக அப்பாவி பெண்களை மிரட்டி கொள்ளையிடும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

அந்தரங்க புகைப்படங்களை பொதுவெளியில் பிரசுரிப்பதாக மிரட்டி பல பெண்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான பிராங்குகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இதில் பல சம்பவங்களும் போலியான மிரட்டல் எனவும், ஆனால் அச்சத்தில் பலரும் பணம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வெப்கேம் வாயிலாக தங்களின் அந்தரங்க காட்சிகளை பதிவு செய்துள்ளதாகவும், குறிப்பிட்ட தொகையை வழங்கினால் புகைப்படங்களை வெளியாவதில் இருந்து தவிர்க்கலாம் என மர்ம நபர்களால் மிரட்டல் விடுப்பதும் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி இதற்கு ஆதாரமாக மொபைல் எண்களையும், திருடப்பட்ட கடவுச்சொற்களையும் அவர்கள் கூறி நம்ப வைப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் பல பெண்களும் சிக்குவதாகவும், சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் பொருட்டு அவர்கள் கேட்கும் தொகையை பலரும் வழங்கி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி 6 மாத கால கட்டத்தில் 100 பிட்காயின்கள் வரை கொள்ளையர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு சுமார் 360,000 பிராங்குகள் என கூறப்படுகிறது.

உலமெங்கும் இதுபோன்ற கொள்ளைச் சம்பவத்தில் சுமார் 22 மில்லியன் டொலர் மதிப்பிலான பிட்காயின்கள் கைமாறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு துவக்கத்தில் ஜேர்மனியில் இந்த நூதன கொள்ளை முதன் முறையாக அரங்கேறியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெறு 5 நாட்களில் குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்குக்கு சுமார் 40,000 பிராங்குகள் மதிப்பிலான பிட்காயின்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அரசாங்கத்தின் எச்சரிக்கையை மீறி பல பெண்கள் இந்த நூதன கொள்ளையர்களுக்கு பிணைத் தொகையாக அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers