வெளிநாட்டு வேலை வாய்ப்பை உதறும் சுவிஸ் இளைஞர்கள்: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

தற்கால சுவிஸ் இளைஞர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை அதிகம் விரும்புவதில்லை என ஆய்வுகள் வெளியாகியுள்ளது.

சுவிஸ் இளைஞர்கள் பெரும்பாலும் தங்கள் நாட்டை விட்டு வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்வதை விரும்புவதில்லை எனவும்,

தங்களது பாதுகாப்பு எல்லையைவிட்டு ஒருபோதும் வெளியேறுவதில்லை எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், தங்களது காதலிகள், காதலர்களை விட்டுப் பிரிய எண்ணம் இல்லாததே வெளிநாடு செல்வதை அவர்கள் தவிர்ப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதனால் சுவிஸ் இளைஞர்கள் சர்வதேச வேலை வாய்ப்புகள் தொடர்பில் எந்த அக்கறையும் எடுத்துக் கொள்வதில்லை எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் வெளிநாடு செல்லும் இளைஞர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை பெறுவதில் சிக்கல் இருப்பதாகவும், ஒருமுறை சென்று திரும்பும் இளைஞர்களுக்கு சொந்த நாட்டில் வேலைக்கான உத்தரவாதம் இருப்பது இல்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers