தற்கொலை செய்யப்போவதாக வந்த தொலைபேசி அழைப்பு: விரைந்து சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் மாயமானதாக கூறப்பட்ட நபர் தற்கொலை செய்யப்பட்ட நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார்.

பாஸல் மண்டலத்தின் Buckten பகுதியில் 59 வயது நபர் ஒருவர் மாயமானதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் குறித்த பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் சந்தேகத்தின் பேரில் நுழைந்து தேடியுள்ளனர்.

அப்போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் நபர் ஒருவரை பொலிசார் மீட்டுள்ளனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட நபரே மாயமானதாக புகார் தெரிவிக்கப்பட்டது தெரியவந்தது.

பொலிசார் அந்த குடியிருப்பை நெருங்கிய நிலையில் துப்பாக்கி சத்தம் ஒன்று கேட்டதாகவும், அது இவர் தற்கொலை செய்து கொண்டதாக இருக்கலாம் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

குறித்த 59 வயது நபர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் ஏதும் வெளிவரவில்லை.

தற்கொலை செய்து கொண்ட நபரை மீட்க சுமார் 30 பொலிசார் துரித நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இருப்பினும் அவரை உயிருடன் மீட்க முடியவில்லை என அவரது குடும்பத்தாரிடம் பொலிசார் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்