சூரிச் மண்டலத்தை விட்டு வெளியேறும் வெளிநாட்டவர்கள்: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் அதிகரிக்கும் வாடகை கட்டணங்களால் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் வேறு பகுதிகளுக்கு குடியேறிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சூரிச் மண்டலத்தில் சுமார் 395,000 வெளிநாட்டவர்கள் குடியிருந்து வந்துள்ளனர்.

இது ஒட்டுமொத்த சுவிட்சர்லாந்தில் குடியிருக்கும் வெளிநாட்டவர்களில் 27 சதவிகிதம் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது அந்த நிலை இல்லையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், வாடகை உள்ளிட்ட கட்டண உயர்வால் பெரும்பாலானோர் பரிதவிப்பதாகவும் குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி நகர்ப்புற மாவட்டங்கள் 4 மற்றும் 5-ல் பொதுவாக வெளிநாட்டவர்களே குடியிருந்துவரும் நிலையில் தற்போது முதன்முறையாக சரிவை சந்தித்துள்ளது.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஐரோப்பிய மக்களே நகர்ப்புற மாவட்டங்களில் இருந்து கணிசமாக வெளியேறியுள்ளனர்.

ஆனால் நகர்ப்புற மாவட்டங்கள் 6, 7 மற்றும் 8-ல் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

வடக்கு மற்றும் மேற்கத்திய ஐரோப்பியர்கள் பெரும்பாலும் நகர்ப்புற மாவட்டங்களில் மட்டுமெ குடியிருக்க விரும்புவதாக கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்