சுவிட்சர்லாந்தின் மதிப்புகள் இவை தான்: சுவிஸ் ஜனாதிபதி பெருமிதம்

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து

சுவிஸில் நடைபெற்ற உலக பொருளாதார கூட்டத்தில் பேசிய அந்நாட்டு ஜனாதிபதி, நேரடியான ஜனநாயக முறையே நமது நாட்டின் மதிப்பு என்று தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தின் Davos நகரில் உலக பொருளாதார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அந்நாட்டின் ஜனாதிபதி Ueli Maurer கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் சுதந்திரம், பொறுப்புணர்வு மற்றும் நேரடி ஜனநாயகம் ஆகியவையே சுவிட்சர்லாந்தின் மதிப்புகள் என பாராட்டினார். மேலும் அவர் கூறுகையில், ‘நாம் கட்டளைகளை நிராகரிக்க வேண்டும்.

நமது அரசியலமைப்பில் அதிக பயன்படுத்தப்படும் வார்த்தை சுதந்திரம் என்பதாகும். அதற்காக நாம் பெருமை கொள்ள வேண்டும். நமக்காகவும், மற்றவர்களுக்காகவுமான பொறுப்பை நாம் தாமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என தெரிவித்தார்.

சுவிஸின் நிதியமைச்சராகவும் உள்ள Ueli Maurer, பணி நெறிமுறையை உயர்த்திக் காட்டி பேசினார். ஆனால், வேலை செய்யும் நாட்களில் பணிபுரிவதற்காக நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், மாறும் வளர்ச்சிப்பாதைக்கான புதிய வழிமுறைகளுக்கு சுவிஸ் எப்போதும் திறந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக, சுவிஸின் நேரடி ஜனநாயக முறையானது உயர்தர மக்களுக்கும், சாதாரண மக்களுக்குமான உரையாடல்கள் தான் என்று கூறிய Maurer, அதற்கு கொஞ்சம் காலம் ஆனாலும் அதுவே அனைத்து வகையிலும் ஏற்றுக்கொள்வதற்கான தீர்வுகளுக்கு இட்டுச்செல்லும் என்றும் தெரிவித்தார்.

தனிப்பட்ட உறவுகள் சிறப்பாக இருக்க புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த கூட்டத்திற்காக சுவிஸ் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்