பிரமாண்ட நோக்கத்திற்காக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள சுவிஸ் மாணவர்கள்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பிரமாண்ட நோக்கம் ஒன்றிற்காக இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளார்கள்.

அவர்களது கோரிக்கை உங்கள் கோரிக்கையும் என் கோரிக்கையும்தான். ஆம், சீதோஷ்ண மாற்றம் தொடர்பில் முக்கிய நடவடிக்கை எடுக்கும்படி அரசாங்கத்தை கோரி அவர்கள் ஸ்டிரைக் செய்கிறார்கள்.

2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், சுவீடனில், Greta Thunberg என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஸ்டிரைக் செய்ததை மாதிரியாக எடுத்துக் கொண்டு சுவிஸ் மாணவர்கள் ஸ்டிரைக்கில் இறங்கியுள்ளார்கள்.

பின்னர் அவர் போலந்தில் நடைபெற்ற சீதோஷ்ண மாநாடு ஒன்றில் உரையாற்ற அழைக்கப்பட்டார்.

அந்த உரையில், அவர் உலக தலைவர்கள் சீதோஷ்ண பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யாமல் பொறுப்பற்ற சிறு பிள்ளைகள் போல் நடந்து கொள்வதாக கடுமையாக குற்றம் சாட்டினார்.

மீண்டும் ஜனவரி மாதம் 23 முதல் 25 வரை நடைபெற உள்ள உலக பொருளாதார மாநாட்டிலும் பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளார் Greta Thunberg.

Greta Thunbergஐ பின்பற்றி அவுஸ்திரேலியா, பிரித்தானியா, பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் ஜப்பானிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளார்கள். அந்த ஸ்டிரைக்குகளில் சமீபத்தில் இணைந்துள்ள நாடு சுவிட்சர்லாந்து.

சுவிட்சர்லாந்தில் 12 நகரங்களில் உள்ள சுமார் 6,000 மாணவர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஏற்கனவே சில நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் எடுத்த நடவடிக்கைகள் எதற்கும் சரியான பதில் கிடைக்காத நிலையில், இம்முறை பல்வேறு நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் இணைந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers