இரு பிள்ளைகளுடன் தந்தையின் பதற வைக்கும் செயல்: சுவிஸ் மக்களை உலுக்கிய சம்பவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் இரண்டு பிள்ளைகளுடன் தந்தை ஒருவர் தமது குடியிருப்புக்குள் தீக்குளித்து இறந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Chur நகரத்தில் ஞாயிறன்று பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களை கண்கலங்க வைத்தது.

33 வயதான அந்த நபருடன் அவரது 3 மற்றும் 8 வயதான பிள்ளைகள் இருவரும் உடல் கருகி பலியாகியுள்ளனர்.

தமக்கு தாமே நெருப்பு வைத்துக் கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதை மண்டல பொலிசார் தங்களது முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் தெரிவித்துள்ளனர்.

குறித்த குடும்பத்தின் இழப்பு அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது. பலரும் தங்களால் இச்சம்பவத்தை நம்ப முடியவில்லை எனவும்,

மிகவும் மகிழ்ச்சியான அந்த குடும்பம் இதுபோன்ற முடிவை மேற்கொள்ள என்ன காரணம் எனவும் வினவியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் அந்த குடும்பத் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மரணமடைந்த அந்த நபரும் 28 வயதான அவரது மனைவியும் கடந்த 2017 ஆம் ஆண்டு வரை லூசெர்ன் மண்டலத்தில் குடியிருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தங்கள் இரு பிள்ளைகளுடன் Chur நகரத்தில் இருவரும் குடியேறியுள்ளனர். ஆனால் இருவரும் இரண்டு குடியிருப்பில் வேறு வேறு முகவரியில் குடிபெயர்ந்துள்ளனர்.

இதுவே அப்பகுதி மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அந்த தந்தையுடன் வாழ்ந்துவரும் இரு பிள்ளைகளும் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதால், அவர்களின் தாயார் தொடர்பில் எவரும் கேள்வி எழுப்பவில்லை என கூறப்படுகிறது.

தீக்குளித்து பலியான அந்த நபர் டொமினிக்கன் குடியரசு நாட்டவர் எனவும், லூசெர்ன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர் எனவும் தெரியவந்துள்ளது.

இருப்பினும் தமது இரு மக்களுடன் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதன் காரணம் தொடர்பில் இதுவரை தெளிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

சம்பவத்தின்போது பிள்ளைகளின் தாயார் அவரது குடியிருப்பில் இருந்துள்ளதால் அவர் பாதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers