சுவிஸில் ஒரே ஆண்டில் பல மில்லியன்களை அள்ளிய லொட்டரி பிரியர்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் 31 பேர் லொட்டரியில் பல மில்லியன்களை அள்ளியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸ் லொட்டரி பிரியர்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டாக கணக்காக்கப்படுகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் சுவிஸ் குடிமக்களில் 31 பேர் லொட்டரியால் மில்லியனர்களாக மாறியுள்ளனர்.

சுவிஸ் லோட்டோ எனப்படும் லொட்டரியை விரும்பி விளையாடும் 22 பேர் சுமார் ஒரு மில்லியன் பிராங்குகளுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் 6 பேர் ஜாக்பாட் பரிசும் அள்ளியுள்ளனர். 20 பேர் 6 சரியான எண்களை குறிப்பிட்டுள்ளனர். மேலும் கடந்த ஆண்டில் மட்டும் இருவர் 29 மில்லியன் பிராங்குகளுக்கும் அதிகமாக வெற்றி பெற்றுள்ளனர்.

இதேபோன்று யூரோ மில்லியன்ஸ் என்ற லொட்டரியில் நபர் ஒருவர் சுவிட்சர்லாந்திலேயே அதிக தொகையை அள்ளும் அதிர்ஷ்டசாலியாக தெரிவானார்.

அக்டோபர் 2 ஆம் திகதி யூரோ மில்லியன் லொட்டரியில் இவருக்கு 183.9 மில்லியன் பிராங்குகள் பரிசாக கிட்டியது.

இன்னொருவர் 8 இலக்க தொகையை பரிசாக அள்ளினார். மேலும் இருவர் மில்லியன் பிராங்குகளை பரிசாக வென்றனர்.

யூரோ மில்லியன்ஸ் லொட்டரியில் இதுவரை சாதனையாக கருதப்படுவது கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபரில் போர்த்துகல் நாட்டவருக்கு கிடைத்த பரிசேயாகும். மொத்தமாக 229.5 மில்லியன் பிராங்குகளை அவர் பரிசாக அள்ளியிருந்தார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers