சுவிட்சர்லாந்து இளைஞர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் 17 வயதை எட்டிய இளைஞர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக, சர்ச்சை கிறிஸ்துமஸ் பரிசொன்றை வழங்கியுள்ளது அரசு.

போக்குவரத்துத்துறை அமைச்சரான Doris Leuthard முன்வைத்துள்ள திட்டம் ஒன்றின்படி, அடுத்த ஆண்டிலிருந்து 17 வயதிலிருந்தே இளைஞர்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு புரொவிஷனல் லைசன்ஸ் வழங்கப்படும்.

அதன்படி 17 வயதான இளைஞர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்ற பெரியவர் ஒருவருடன் வாகனம் ஓட்டும் பயிற்சியில் ஈடுபடலாம்.

அவர்கள் 18 வயதை அடைந்ததும் தங்கள் புதிய முழுமையான ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

தற்போது வாகனம் ஓட்ட பயிற்சி பெறுவோர் 18 வயதாவதற்கு ஒரு மாதம் இருக்கும்போதுதான் உரிமம் பெற விண்ணப்பிக்க முடியும்.

இந்த மாற்றத்தை, தான் பணி ஓய்வு பெறுவதற்கு முன் ஒரு கிறிஸ்துமஸ் பரிசாக செய்துவிட வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சரான Leuthard விரும்புகிறார் என எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

பல தரப்பினரிடமிருந்தும் Leuthardஇன் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த மாற்றத்திற்கான அதிகாரப்பூர்வமான காரணம், ஓட்டுநர் பயிற்சி பெறுவோர், குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது புரொரொவிஷனல் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்பதால், அத்தகைய உரிமத்தை விரைவாக பெற இது உதவும் என்பதற்காகவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், ஓட்டுநர் பயிற்சி அளிப்பவர்களோ, இதனால் ஒன்றும் ஓட்டுநர் பயிற்சி பெறுவோர், மணிக்கணக்காக காரில் அமர்ந்து பயிற்சி பெறப்போவதில்லை என்று கூறி அந்த கருத்தை நிராகரித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers