சுவிஸ் மக்களை அலட்டும் மாபெரும் சிக்கல்கள்: வெளியான பட்டியல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிஸ் மக்களை அலட்டும் மாபெரும் சிக்கல்கள் குறித்த ஆய்வில் 45 சதவிகித மக்கள் ஓய்வுக்குப் பின்னர் என்ன செய்யப் போகிறோம் என்பதில் அதிக கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான மக்கள் வேலையின்மை குறித்து கவலை கொள்ளவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

எதிர்கால ஓய்வூதியம்:

சுவிட்சர்லாந்தின் 45 சதவிகித மக்கள் தங்களின் எதிர்கால ஓய்வூதியம் தொடர்பில் கவலை தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி 76 சதவிகித மக்கள் தங்களுக்கு தற்போதிக்கும் பணியே போதும் என்ற மன நிலையில் உள்ளனர்.

10 பேரில் 6 பேர் சேவை வரி அதிகரிப்பதை வரவேற்றுள்ளனர்.

உடல்நலம் / மருத்துவ காப்பீடு:

சுவிஸில் 41 சதவிகித மக்கள் தங்களின் உடல்நலம் குறித்தும் மருத்துவ காப்பீடு நிறுவனங்கள் தொடர்பிலும் கவலை தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டவர்கள்:

கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் சுவிஸ் மக்களின் கவலை வெளிநாட்டவர்கள் தொடர்பிலேயே உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் 37 சதவிகித மக்கள் கவலை கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

அகதிகள் / தஞ்சம் தேடுவோர்:

சுவிட்சர்லாந்தை நாடும் அகதிகள் மற்றும் தஞ்சம் தேடுவோர் தொடர்பில் 31 சதவிகித மக்கள் கவலை கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு:

சுவிஸ் குடிமக்களில் ஐந்தில் ஒருபகுதி மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வேலையின்மை:

சுவிட்சர்லாந்தை பொறுத்தமட்டில் 2003 முதம் 2016 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் வேலையின்மை என்பது மறுக்கப்படாத மாபெரும் கவலையாக இருந்துள்ளது.

ஆனால் தற்போது 85 சதவிகித மக்கள் தங்களுக்கான வேலையை உறுதி செய்துள்ளனர் என்றே ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்