சுவிஸ் மருத்துவமனைகள் வெளியிட்ட முக்கிய அறிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் உள்ள மொத்த மருத்துவமனைகளிலும் உள்நோயாளர்களின் எண்ணிக்கை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் சுவிஸ் மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி குறித்து ஒப்புக்கொள்வது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் உள்ள 281 மருத்துவமனைகளில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 12 சதவிகிதம் பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை சரிவை சந்தித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு சுமார் 1.5 மில்லியன் சுவிஸ் மக்கள் மருத்துவமனைகளில் உள்நோயாளர்களாக சிகிச்சை பெற்று வந்தனர்.

ஆனால் 2017 ஆம் ஆண்டு இந்த விகிதம் 11.6 என சரிவடைந்துள்ளது. சரிவடைந்துள்ள எண்ணிக்கை மிகக்குறைவு என்றபோதும் 1998 ஆம் ஆண்டில் இருந்து இது முதன்முறை என கூறப்படுகிறது.

உயர் தர மருத்துவ சிகிச்சைக்கு பெயரெடுத்துள்ள நாடு சுவிட்சர்லாந்து. மட்டுமின்றி உலகிலேயே சிகிச்சைக்கான கட்டணங்களும் மிக அதிகம் கொண்ட நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று.

இங்குள்ள மருத்துவமனைகளில் உள்நோயாளர் ஒருவருக்கு சிகிச்சைக்காக சுமார் 13,000 பிராங்குகள் செலவாகும் என கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்