முதல் உலகப்போரில் உயிரிழந்தவர்களுக்காக சுவிஸ் நினைவிடங்களில் அஞ்சலி

Report Print Vijay Amburore in சுவிற்சர்லாந்து

முதல் உலகப்போரின் போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவு தினமான இன்று, சுவிற்சர்லாந்தில் உள்ள நினைவுச் சின்னங்களில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

முதல் உலகப் போர் முடிவின் நூற்றாண்டு விழாவை பல நாடுகளும் இன்று சிறப்பாக கொண்டாடி வருகின்றன. இந்த விழாக்களில் இறந்தவர்களுடைய நினைவைக் கௌரவப்படுத்தும் விதமாக நினைவுச்சின்னங்கள் நிறுவப்பட்டுள்ள இடங்களில் பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த போரில் சுவிற்சர்லாந்து ஈடுபடவில்லை என்றாலும், போரில் ஈடுபட்டு உயிர்நீத்த பல நாடுகளை சேர்ந்த ராணுவீரர்களுக்கு சுவிற்சர்லாந்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நினைவு தூண்கல், கல்லறைகள் மற்றும் தட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

1916 முதல் 1919 வரை நடைபெற்ற போரில், காயத்தினாலும், நோயினாலும் பாதிக்கப்பட்ட 65,000க்கும் மேற்பட்ட வீரர்களை சுவிற்சர்லாந்து தங்களுடைய நாட்டிற்கு வரவழைத்தது. அவர்களில் பலரும் அங்கே உயிரிழந்துவிட்டனர்.

போரின் முடிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்த சுவிற்சர்லாந்து நாட்டை சேர்ந்த 3000 ராணுவ வீரர்கள் நோயினாலும், சில விபத்துகளினாலும் உயிரிழந்தனர். 1918 ஆம் ஆண்டின் இறுதியில் மட்டும் ஸ்பானிய காய்ச்சல் நோய்த்தொற்றால் 1800க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

முதல் உலகப்போர் முடிந்து 100 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தற்போது வீரர்கள் அனைவருக்கும் சுவிற்சர்லாந்தில் இருக்கும் நினைவு சின்னங்களில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்