வெளிநாட்டு இளைஞரை விரைந்து நாடுகடத்தும் சுவிஸ் நிர்வாகம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிஸ் குடியுரிமைக்காக திருமண மோசடியில் ஈடுபட்ட கொசோவோ இளைஞரை உடனடியாக நாடுகடத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஆர்கவ் மாகாணத்தில் குடியிருந்து வந்த குறித்த கொசோவோ நாட்டவர் இங்குள்ள பெண்மணி ஒருவரை திருமணம் செய்து 5 ஆண்டுகள் குடும்பம் நடத்தியுள்ளார்.

அப்போது சுவிஸ் குடியுரிமைக்காக மனு அளித்து, சுவிஸ் அரசாங்கம் குடியுரிமையும் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் சுவிஸ் பெண்மணியை விவாகரத்து செய்துவிட்டு கொசோவோ நாட்டு பெண்மணி ஒருவரை அந்த நபர் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் நீதிமன்றத்தில் எட்டிய நிலையில், அவரது இரண்டாவது மனைவியின் பிள்ளைக்கு டி.என்.ஏ சோதனை மேற்கொள்ள அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆனால் அதை குறித்த கொசோவோ பெண்மணி மறுத்து வருவதாக கூறப்படுகிறது. சுவிஸ் குடியுரிமை கோருவதற்காகவே தமது மனைவி மற்றும் பிள்ளையை மறைத்து சுவிஸ் பெண்மணியை திருமணம் செய்து கொண்டாரா என நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும் திருமண மோசடியில் ஈடுபட்டதாக கூறி கொசோவோ நாட்டவரை விரைந்து நாடுகடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்