விலங்குகள் நலனுக்காக சுவிஸ் ராணுவம் எடுத்துள்ள பாராட்டத்தக்க முடிவு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

குதிரைகள் மற்றும் கோவேறு கழுதைகளின் கழுத்தில் பழுக்கக் காய்ச்சிய கம்பியின் உதவியால் சூடு வைத்து ஆடையாளம் இடும் வழக்கத்திற்கு முடிவு கட்ட இருப்பதாக சுவிஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னேறிய ஒரு சமூகத்தில் செய்யப்படும் ஒரு செயலாக அது இல்லை என்று கூறி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து அந்த வழக்கத்தை நிறுத்தப்போவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு சூடு வைப்பது விலங்குகள் மீது ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்றுஆராய்ந்த போது, அவற்றின் உடலில் cortisol என்னும் ஹார்மோனின் அளவு எக்கச்சக்கமாக அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் விலங்குகள் இவ்வாறு அடையாளமிடும்போது அதிக வலியையும் மன அழுத்தத்தையும் அனுபவிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராணுவம் விலங்குகளை கண்டு பிடிப்பதற்காக கடந்த பத்து ஆண்டுகளாக எலக்ட்ரானிக் சிப்களை பொருத்தி வருவதாகவும் பாதுகாப்பு மைச்சகம் தெரிவித்துள்ளது.

பழுக்கக் காய்ச்சிய கம்பியின் உதவியால் சூடு வைக்கப்படும் வழக்கம் நிறுத்தப்பட உள்ளது என்றாலும், விலங்குகளின் கால் குளம்புகளில் லாடம் அடிக்கும் முறை வலியை ஏற்படுத்தாது என்பதால் அது தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்