சுவிஸில் வீடு வாடகைக்கு தேடுகிறீர்களா? அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் வடகை கட்டணங்கள் அதிரடியாக சரிந்துள்ளதால் வாடகை குடியிருப்புகளை நாடுவோர்களுக்கு இது அரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

சுவிஸில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் வாடகை கட்டணங்களில் சுமார் 0.5 சதவிகிதம் அளவுக்கு அதிரடியாக குறைக்கப்பட்டது.

இதே நிலை அக்டோபர் மாதத்திலும் நீடித்த நிலையில், இதுவரை நான்கு முறை வாடகை கட்டணங்களை மாற்றி அமைத்துள்ளதும் சாதாரண பொதுமக்களுக்கு அரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

100 சதுர மீற்றர் கொண்ட ஒரு குடியிருப்புக்கு தற்போது மாத வாடகையாக சுமார் 2165 பிராங்குகள் வசூலிக்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க டிசினோ மாகாணத்தில் வாடகை கட்டணங்கள் 1.1 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளது.

சூரிச் மாகாணத்தில் 100 சதுர மீற்றர் கொண்ட ஒரு குடியிருப்புக்கு மாத வாடகையாக 2,610 பிராங்குகள் கட்டணமாக வசூலிக்கப்பட்டுகிறது.

ஆனால் டிசினோ மாகாணத்தில் இதே குடியிருப்புக்கு 1894 பிராங்குகள் வாடகை கட்டணம் என கூறப்படுகிறது.

ஜெனிவா பகுதியிலும் வடமேற்கு சுவிட்சர்லாந்திலும் வாடகை கட்டணம் மிகவும் குறைவு என கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்