பிச்சை எடுப்பது குற்றமல்ல: எதிர்ப்பை தெரிவிக்க சுவிட்சர்லாந்தில் திரண்ட மக்கள்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

மேற்கு சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் நேற்று முதல் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் நிலையில் மக்கள் கூடி பேரணி ஒன்றை நடத்தினர்.

Vaud பகுதியில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சுமார் 250 பேர் Lausanneஇல் திரண்டு பேரணி ஒன்றை நடத்தினர்.

பிச்சை எடுப்பவர்களுக்கு தற்போது 50 முதல் 100 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்படுகிறது. ‘பிச்சை எடுப்பது குற்றமல்ல’ என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் மக்கள் பேரணியில் பங்கேற்றனர்.

பேரணியில் பேசிய இடதுசாரி குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான Ada Marra, எளியோரின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாமல் போய்விட்டது, ஏழைகள் இப்போது குற்றவாளிகளாகப் பார்க்கப்படுகிறார்கள் என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

அதிக பிச்சைக்காரர்கள் இருக்கும் பகுதியான Lausanneஇல் இதுவரை சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படிருந்தன.

குழந்தைகள் முன்பு பிச்சை எடுப்பது, பணம் எடுக்கும் இயந்திரங்கள் முன் மற்றும் பேருந்து மற்றும் ரயில்களில் பிச்சை எடுப்பது ஆகியவற்றிற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

குழந்தைகளையோ அல்லது தனி நபர்களையோ பிச்சை எடுக்க தூண்டுபவர்களுக்கு 500 முதல் 2,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படும்.

என்றாலும் சில இடங்களில் தடைக்கு விதிவிலக்கு அளிக்கும் திட்டங்களும் உள்ளன.

பிச்சை எடுப்பதற்கு தடை விதிப்பதற்கு எதிராக எதிர்ப்பாளர்கள் செய்திருந்த மேல்முறையீட்டை அக்டோபர் மாதம் சுவிஸ் ஃபெடரல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த தடை, மனித உரிமைகள் குறித்த ஐரோப்பிய ஒப்பந்தத்தை மீறவில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்