50 நாட்களாக சூரிச் விமான நிலையத்தில் தவிக்கும் 4 குடும்பங்கள்: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் 4 குடும்பங்களை சேர்ந்த சிறார்கள் உள்ளிட்ட 20 பேர் சூரிச் விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

சுவிஸ் அரசாங்கம் அவர்களை புறப்பட்ட நாட்டுக்கே திரும்ப வலியிறுத்தியுள்ள நிலையில், நீதிமன்றம் அந்த நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சிரியா மற்றும் ஈராக் நாட்டவர்களான குர்து இனத்தைச் சேர்ந்த 4 குடும்பங்கள் தென் ஆப்பிரிக்கா வழியாக சுவிட்சர்லாந்துக்கு புகலிடம் கோரி வந்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்களின் புகலிட கோரிக்கையை சுவிஸ் அரசாங்கம் உரிய அதிகாரிகளால் நிராகரித்துள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடிய அந்த 4 குடும்பத்தினரும் தங்கள் இயலாமையை நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து சுவிஸ் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு தடைவிதித்த நீதிமன்றம், அவர்களை அடுத்த உத்தரவு வரும்வரை விமான நிலையத்தில் தங்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

தங்களை தென் ஆப்பிரிக்காவுக்கு திருப்பி அனுப்பினால் அவர்கள் அங்கிருந்து சிரியாவுக்கு அனுப்பி வைப்பார்கள் எனவும்,

சிரியாவில் கடும் துன்புறுத்தலுக்கு இரையாக்கப்படுவோம் என அந்த 4 குடும்பத்தினரும் அஞ்சுவதாக கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த 50 நாட்களாக கடும் அவஸ்தை அனுபவித்து வருவதாகவும், விமான நிலையத்தின் போக்குவரத்து பகுதி என்பதால் சரியாக தூங்கியே நாட்களானது என்றும்,

போதிய உணவு இன்றி சிறார்கள் தவிப்பதாகவும், அரசும் நீதிமன்றமும் உடனடியாக உரிய முடிவு எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்