சுவிட்சர்லாந்தில் ஹொட்டல்கள், மதுபான விடுதிகளை மூட உத்தரவு: வெளியான பின்னணி தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
249Shares
249Shares
ibctamil.com

சுவிஸ்ஸின் ஜெனிவா மாகாணத்தில் சட்டவிரோதமாக இயங்கிவரும் ஹொட்டல்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்ட சுமார் 280 ஸ்தாபனங்களை மூட அரசு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நடவடிக்கை தொடர்பில் மேலதிக தகவல்களை மாகாண கவுன்சிலர் Mauro Poggia வியாழனன்று வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய நடவடிக்கையின் நோக்கமே இந்த துறையில் நியாயமான போட்டி இருக்க வேண்டும் என்பதே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவா மாகாணத்தில் மூடப்படும் ஸ்தாபனங்களின் முதற்கட்ட உத்தரவை செப்டம்பர் 26 ஆம் திகதி வெளியிட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் எதிர்வரும் திங்கள் முதல் அதிகாரிகள் ஆய்வுப்பணியை மேற்கொள்வார்கள் எனவும், உத்தரவு பெற்ற ஹொட்டல்கள் மீண்டும் செயல்பட்டு வருகிறது எனில் பொலிசார் உதவியுடன் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த புதிய சட்டத்தின்படி செயல்படாத 280 நிறுவனங்களுக்கே இந்த உத்தரவு பொருந்தும் எனவும் மாகாண கவுன்சிலர் Mauro Poggia தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்