சுவிஸில் சுரேஷ் வீட்டில் தங்கியது உண்மை தான்! அதன் பின் நடந்தது தெரியுமா? சின்மயி அதிரடி

Report Print Santhan in சுவிற்சர்லாந்து

சுரேஷ் அவர்களுக்கு வைரமுத்துவைப் பற்றி பல விடயங்கள் தெரியும், ஆனால் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக பாடகி சின்மயி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல பாடகியான சின்மயி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் கடந்த 2005-2006-ஆம் ஆண்டுகளில் நடந்தது.

இலங்கைத் தமிழர்களுக்காக வீழமாட்டோம் என்ற ஆல்பத்தில் தானும் மாணிக்க விநாயகமும் பாடியிருந்ததாகவும் இது தொடர்பான வெளியீட்டு விழா, சுவிட்சர்லாந்தின் சூரிச் அல்லது பெர்ன் நகரில் நடந்ததாக கூறிய சின்மயி, இந்த விழாவில் தாங்களும் கலந்துகொண்டு பாடியதாகக் கூறியுள்ளார்.

விழா முடிந்து எல்லோரும் புறப்பட்ட நிலையில், தன்னையும் தன் தாயாரையும் புறப்பட வேண்டாம் எனக் கூறியதாகவும் அப்போது விழா அமைப்பாளர்களில் ஒருவர் வைரமுத்துவை அவரது ஹொட்டல் அறையில் சென்று சந்திக்குமாறு கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து சின்மயின் டுவிட்டர் பக்கத்திற்கு பலரும் திரைப்பிரபலங்களால் தாங்கள் சந்தித்த பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் போன்றவைகளை அனுப்பி வருகின்றனர்.

அதை சின்மயி அவர்களின் பெயரைக் வெளியிடாமல், அவர்களின் தகவகளை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் குறிந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சுரேஷ் என்பவர் சின்மயிக்கு எதிராக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,

தவறான வார்த்தைகளை பயன்படுத்துவதை சின்மயி நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒரு படைப்பாளி மீது குற்றம்சாட்டும் சின்மயி மீது உலகத் தமிழர்கள் கோபத்தில் உள்ளனர்.

சின்மயி, அவரது தாயார் என்னுடைய இல்லத்தில்தான் தங்கினார்கள் என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள சின்மயி, சுரேஷ் வீட்டில் தான் தங்கினோம். பாடகர் மாணிக்க விநாயகமும் தாங்கினார். ஆனால் நிகழ்ச்சி முடிந்தவுடன் அவரை அனுப்பிவிட்டார்கள். ஆனால் எங்களுக்கு டிக்கெட் புக் செய்யவில்லை.

மேலும், சுரேஷ் எங்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். அப்போது அவருக்கு ஆங்கிலம் சுத்தமாக வரவில்லை. அவர் ஜேர்மன் மொழி பேசினார். அவர் மனைவியும் அப்படிதான்.

வைரமுத்து பற்றி பல விஷயங்கள் அவருக்கு தெரியும், ஆனால் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என கூறியுள்ளார்

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்