போக்குவரத்து நெரிசலை முறியடிக்க சுவிட்சர்லாந்தின் சூப்பர் நடவடிக்கை

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சுவிட்சர்லாந்து ஒரு அருமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கார் பூல் என்று அழைக்கப்படும் ஒருவரின் காரில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பயணிக்கும் இந்த திட்டத்தால் சாலையில் கார்களின் எண்ணிக்கை குறைவதால் போக்குவரத்து பெருமளவில் முறையும்.

அதாவது ஒரே பகுதியில் உள்ள அலுவலகங்களுக்கு செல்லும் ஐந்து பேர் ஒரே பகுதியில் இருந்து புறப்பட்டால், அவர்கள் ஆளுக்கு ஒரு காரில் செல்லாமல், ஐந்து பேரும் சேர்ந்து அவர்களில் ஒருவரின் காரில் செல்லும் முறையாகும் இது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கார் பூல் முறையில் பயணிக்கும் கார்களுக்கு மட்டும் என தனியாக ஒரு பாதையை சுவிட்சர்லாந்து உருவாக்கியுள்ளது.

இது சுவிட்சர்லாந்தின் முதல் கார் பூல் பாதை மட்டுமின்றி ஐரோப்பாவிலேயே முதல் சர்வதேச கார் பூல் பாதையாகும்.

இந்த பாதை சுவிட்சர்லாந்திலிருந்து Thônex-Vallard எல்லை வழியாக பிரான்சுக்குள் செல்கிறது.

அடுத்த ஆண்டு வரை சோதனை முயற்சியாக செயல்படுத்தப்படும் இந்த பாதை காலை 6 முதல் 9 மணி வரையும் மாலை 4 முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும்.

Thônex-Vallard எல்லை வழியாக பிஸியான நாட்களில் 22,000 வாகனங்களும் மற்ற நாட்களில் 17,000 வாகனங்களும் பயணிப்பதாக தெரிவிக்கும் அதிகாரிகள், இதனால் போக்குவரத்து நெரிசலும் தாமதமும் ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்த பாதை பிரான்ஸ் பகுதியில் 550 மீற்றர் நீளத்திற்கும் சுவிஸ் பகுதியில் 450 மீற்றர் நீளத்திற்கும் அமைக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் பகுதியில் இரண்டாவது பயணி இல்லாமல் ஒரு ஆள் மட்டும் இந்த பாதையில் காரில் பயணித்தால் அவர்களுக்கு 22 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும், ஆனால் தற்போதைக்கு சுவிஸ் பகுதியில் அபராதம் எதுவும் இல்லை.

இந்த கார் பூல் பாதை திங்கட்கிழமை (8.10.18) அன்று திறக்கப்பட்டது. செப்டம்பர் 2019 வரை அது சோதனை முயற்சியாக பயன்பாட்டிலிருக்கும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers