சுவிஸ்ஸில் துப்பாக்கிச் சூடுக்கு இரையான அகதி இளைஞர்: அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் துருக்கி இளைஞர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் க்ளாரஸ் மாகாணத்தில் குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் பல்வேறு குடியிருப்புகளில் தீவிர சோதனையும் மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கி தாக்குதல் தொடர்பில் கைதான மூவரும் ஆர்காவ் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி குடியிருப்புகளில் சோதனை நடத்தப்பட்டதும் ஆர்காவ் மாகாணத்தில் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குற்றுயிராக மீட்கப்பட்ட துருக்கியர் தற்போது ஆபத்து கட்டத்தை தாண்டியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இதுவரை குறித்த இளைஞரிடம் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்படவில்லை என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர் ஆர்காவ் மாகாணத்தில் குடியிருப்பவர் எனவும், செவ்வாய் அன்று இரவு பல்வேறு குண்டு காயங்களுடன் தாமாகவே மருத்துவமனையில் சேர்ந்த அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

28 வயதான அந்த துருக்கியர் சம்பவத்தின்போது கருப்பு வண்ண மெர்சிடஸ் செடான் காரில் மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்