சுவிட்சர்லாந்தில் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் மொத்த மக்கள்த் தொகையில் 17 சதவிகிதம் பேர் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதில் ஜெனிவா மாகாணத்தில் மட்டும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, Zurich, Basel City, Ticino, Vaud மற்றும் Neuchâtel உள்ளிட்ட மாகாணங்களில் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையானது 20 விழுக்காடை கடந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

இதில் இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கும் மக்கள் குறைவான மாகாணங்களாக Bern, Uri, Schwyz, Obwalden, Nidwalden, Appenzell Inner Rhodes மற்றும் Appenzell Outer Rhodes ஆகியவை பதிவாகியுள்ளன.

இதில் 64.4% மக்கள் உரிய முறைப்படி சுவிஸ் குடியுரிமை பெற்றுள்ளதாகவும், 35.6% மக்கள் சுவிஸ்ஸில் பிறந்ததால் குடியுரிமை பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 45,000 பேர் சுவிஸ் குடியுரிமை பெற்றுள்ளனர். இது கடந்த 2016 ஆம் ஆண்டை விடவும் 2,000 எண்ணிக்கை அதிகமாகும்.

மட்டுமின்றி இதில் நான்கில் மூன்று பங்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்