சுவிஸ் கப்பலிலிருந்து கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 12 பேர்: மீட்க நைஜீரியா உறுதி

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

நைஜீரிய கடற்பகுதியிலிருந்து கடற்கொள்ளையர்களால் சுவிஸ் கப்பலிலிருந்து கடத்தப்பட்ட 12 பேரை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமையன்று சுவிஸ் வியாபாரக்கப்பல் ஒன்றை மடக்கிய கடற்கொள்ளையர்கள் கப்பலிலிருந்த 19 பணியாளர்களில் 12 பேரைக் கடத்திச் சென்றனர்.

கடற்கொள்ளையர்கள் நைஜீரிய பகுதிகளில் பணத்துக்காக கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது.

சனிக்கிழமையும் சுவிஸ் கப்பல் ஒன்றை மடக்கிய கொள்ளையர்கள், நீண்ட ஏணிகளின் உதவியால் அதில் ஏறி, தகவல் தொடர்பு சாதனங்களை சேதப்படுத்தி விட்டு அதிலிருந்த பணியாளர்களில் 12 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

சுவிஸ் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான Noémie Charton, கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட யாரும் சுவிஸ் நாட்டவர்கள் இல்லை என்றும், ஆனால் அவர்கள் எந்த நாட்டவர்கள் என்பது குறித்து தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் கடத்தப்பட்ட கப்பலின் உரிமையாளர்களான ஜெனீவாவை மையமாகக் கொண்ட நிறுவனத்தார் பாதுகாப்பு காரணங்களுக்காக பிணைக்கைதிகளின் அடையாளங்களை வெளிப்படுத்த இயலாது என்று தெரிவித்துள்ளதோடு, கடத்தப்பட்டவர்களின் குடும்பங்களுடன் தொடர்பிலிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்