சுவிட்சர்லாந்து கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து

நைஜீரிய கடலில் பயணம் செய்த சுவிட்சர்லாந்து சரக்கு கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இருந்து துறைமுக நகரான ஹார்கோர்ட்டை நோக்கி சுவிட்சர்லாந்தை சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது போனி தீவில் இருந்து 45 நாட்டிகல் மைல் தொலைவில் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர்.

கப்பலில் இருந்த 19 மாலுமிகளையும் சிறைப்பிடித்துள்ளனர்.

இத்தகவலை கப்பலின் கேப்டன் க்லாரஸ் வெளியிட, சுவிட்சர்லாந்து வெளிவிவகாரத்துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனைதொடர்ந்து கடத்தப்பட்டவர்களை விரைவாக மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்