சுவிஸ் மக்கள் தங்கள் உடல் நலத்திற்காக எவ்வளவு செலவிடுகிறார்கள் தெரியுமா? ஆய்வு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து மக்கள் மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தாலும்கூட தங்கள் கையிலிருந்து பெரும் தொகையை தங்கள் உடல் நலத்திற்காக செலவிடுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

Comparis என்னும் இணையதளம் நிகழ்த்திய ஆய்வு ஒன்றில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்விலிருந்து ஒரு உண்மை நன்றாக தெரிகிறது, அதாவது சுவிட்சர்லாந்தில் மருத்துவச் செலவு அதிக செலவு வைப்பதாக உள்ளது.

இந்த ஆய்வு உலகிலேயே சுவிட்சர்லாந்தில்தான் மக்கள் தங்கள் சொந்த பாக்கெட்டிலிருந்து மருத்துவச் செலவுக்காக அதிக பணம் செலவிடுகிறார்கள் என்ற விடயத்தை வெளிப்படையாக காட்டியுள்ளது.

காப்பீட்டு நிறுவனங்கள் அளிக்கும் 80 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் போக நோயாளிகள் தங்கள் சொந்தப் பணம் 24 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை செலவிடுகிறார்கள், சில சிறு துணை காப்பீடுகளையும் இதற்காக அவர்கள் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள்.

அதனால் அடிப்படை காப்பீடு மட்டுமே மக்களின் தேவைகளை சந்திக்க போதுமானதாக இல்லை என்பது தெரியவந்துள்ளதாக இந்த ஆய்வை வெளியிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்