சுவிஸ்ஸில் துப்பாக்கியால் 3 பேரை கொன்றவர் தொடர்பில் வெளியான புதிய தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் வாலெய்ஸ் மாகாணத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த நபர் தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2 உளவியல் தொடர்பான அறிக்கைகளின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு வாலெய்ஸ் மாகாணத்தின் Daillon கிராமத்தில், அந்த நபர் தமது குடியிருப்பில் இருந்து கொண்டு, தெருவழியாக செல்லும் பொதுமக்கள்ள மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் 3 பெண்கள் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டனர். 2 ஆண்கள் துப்பாக்கி குண்டு பாய்ந்து தீவிர சிகிச்சைக்கு பின்னர் உயிர் தப்பினர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மட்டுமின்றி துப்பாக்கி கலாச்சரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இதனிடையே கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளை பொலிசார் முற்றிலும் அழித்துள்ளனர்.

மேலும் குறித்த நபர் 2005 ஆம் ஆண்டில் இருந்தே மன நலம் தொடர்பான சிகிச்சையில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் அளித்த ஆவணங்களின் அடிப்படையில்,

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கவும் தீர்ப்பானது. இந்த நிலையில் தற்போது 38 வயதான அந்த நபரின் செய்கையை குற்றவியல் நடவடிக்கையாக கருத முடியாது எனவும்,

உளவியல் பாதிப்பு காரணமாகவே அவர் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்