சுவிஸ் தூதர் கெமரா முன் செய்த செயல்: அதிர்ச்சி வீடியோ

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

புதிதாக பதவியேற்றிருக்கும் ஜேர்மனிக்கான சுவிஸ் தூதர் கெமரா முன் மற்றவர்கள் பார்ப்பார்கள் என்ற எண்ணம் கூட இன்றி செய்த ஒரு செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனிக்கான சுவிஸ் தூதராக புதிதாக பொறுப்பேற்றுள்ள Paul Seger தனது முதல் உரையை கெமரா முன்பு பதிவு செய்து கொண்டிருந்தார்.

அவர் அருகே இரண்டு நாட்டுக் கொடிகளும் வைக்கப்பட்டிருந்தன.

பெர்லினில் அமைந்துள்ள சுவிஸ் தூதரகம் நட்பின் வீடாக இருக்கும் என்றும் சந்திக்கும் இடமாக இருக்கும் என்றும் சுவாரஸ்யமாக அவர் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென காற்று வீசியது.

அப்போது அவர் அருகே வைக்கப்பட்டிருந்த சுவிஸ் மற்றும் ஜேர்மன் கொடிகள் இரண்டும் காற்றில் சாய்ந்து கீழே விழுந்து விட்டன.

ஒன்று தன் நாட்டுக் கொடி, இன்னொன்று தனக்கு உணவளிக்கப்போகும் நாட்டின் கொடி, இப்படி இரண்டு முகியத்துவம் வாய்ந்த கொடிகளும் கீழே மண்ணில் விழும் நிலையில், ஒரு தூதராக அவர் பாய்ந்து அந்த கொடியைப் பிடிப்பார் என்று பார்த்தால், அவரோ கொஞ்சமும் யோசிக்காமல், குறைந்தபட்சம் தான் கெமரா முன் நிற்கிறோம், நாளை மக்கள் பார்ப்பார்கள் என்ற எண்ணம் கூட இன்றி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்.

அதை விட கொடுமை என்னவென்றால், அந்த சம்பவத்தை கட் கூட செய்யாமல் அப்படியே ட்விட்டரில் வெளியிட்டுள்ளது தூதரகம்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைவதா அல்லது அவரது நகைச்சுவை உணர்வை எண்ணி சிரிப்பதா என குழம்பி போயுள்ளனர் மக்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்