சுவிற்சர்லாந்தில் தமிழ் குடும்பங்களுக்கிடையே கைகலப்பில் தொடங்கி கத்திக் குத்தில் முடிந்த தகராறு: ஒருவர் கைது

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் Bremgarten பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு(18/8/2018) இரண்டு தமிழ் குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு கத்திக் குத்தில் முடிந்தது.

11 மணிவாக்கில் தகவல் கிடைக்கப்பெற்ற பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது Town Hall Squareஇல் உள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் இரத்தக் காயங்களுடன் இருவர் இருந்ததைக் கண்டு அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இரண்டு குடும்பங்களுக்கிடையே வாய்த்தகறாறு ஏற்பட்டதாகவும் வாக்கு வாதம் முற்றி கத்திக் குத்தில் முடிந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், Bremgarten பகுதி விசாரணை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்